முதல் காதல் அறியா பருவத்தில் வரும் இனம் புரியாத உறவு.
என் ல்வல ரொம்ப நெருங்கிய பள்ளி நண்பனும் உண்டு.
8ம் வகுப்பு 1993/1994 ஆகஸ்ட் நினைக்கிறேன்..
நான் 1-10 வரைக்கும் பையன்கள் கூட தான் படித்தேன்.அதனாலபொண்னுங்க கூட பழகிற வாய்ப்பு கம்மி.
8வது வகுப்பு படிக்கும் போது ஹிந்தி வகுப்பில் சேர்ந்தேன்..அங்கே இரண்டு பிரிவா நாற்கலி போட்டுஇருப்பாங்க. எதிர்தத பிரிவுல அந்த சின்னப் பொண்ணு.
என் மூளையின் நீயுரான்கள் அந்த பதிவை இன்னும் மறக்கவில்லை/அழிக்கவில்லை. அன்பான புன்முறுவல், பள்ளிச் சீருடை(பாவடை சட்டை),கனிவான பார்வை பேசனும் நினைச்சிருக்கேன் சில நாள், ஆனால் காற்றில் கரைவாள் என்றும் அறியவில்லை
நம்ம மனம் இருக்குதே ரொம்ப மோசமானது..நம்மிடம் இருப்பது கண்ணுக்குஎப்பவும் தெரியாது, ஆனா கிடைக்காது பத்தி தான் ஏங்கும், யோசிக்கும்..
அந்த சிறுமியிடம் ஓரு வார்த்தை கூட் பேசினது இல்லை. அவளிடம் எப்படி ஈர்ப்பு வந்தது என்று இன்று வரைக்கும் என் அறிவுக்கு எட்டவில்லை.
மொத்தமா அவள 5 தடவை தான் பார்த்து இருப்பேன்...:-(
பள்ளித் தோழனும்( வெறும் 3 மாதம் அவன் எனக்கு பழக்கம்) அந்த வகுப்பில் கூட படிச்சான். அடுத்த நாள் எனக்கு ஹிந்தி பரிட்சை(முழு ஆண்டு) . எல்லோருக்கும் வாழ்த்து சொல்லிட்டு என் நண்பனுக்கு கை கொடுத்தேன்.
"நீ பெயில போய்டுவேன்னு சொன்னான்" எனக்கு 90% கோபம் வராது :-)அன்று அந்த 10% என்னை ஆட்கொள நான் அவனிடம் "வருகிற திங்கள்கிழமை உன்னிடம் பேசமாட்டேன் என்றேன்.."
ஹிந்தி வகுப்பு முடிந்து வீட்டுக்கு இரண்டு பேரும் செல்கிறோம் மயான அமைதி நாங்கள் வீடு திரும்பி வரும் வரை. ஓரு நட்பின் முறிவு தெரியாமல் அன்றைய பொழுது முடிந்தது. வாழ்க்கையில் சில தருணங்கள் உடனே விளங்காது .
அவன் அதறகு பிறகு பேசவில்லை. அதற்கு 2 நாள் தூங்காமல் ஏங்கியிருப்பேன்.:-(
நட்புவேரின் ஆழம் அறியாமல் பிரிந்து அது என்னை 100 நாள்களுக்கு மேல் உலுக்கியது.
அமெரிக்கா ரஷ்யா மாதிரி எங்க பனிப்போர் தொடங்கியது 8ம் வகுப்பில் தொட்ங்கியது 12ம் வகுப்பு முடியும் வரை தொடர்ந்தது.என் ஏக்கம் மனதுக்குள் புதைந்தது.
1999 ..சென்னை காலேஜில் நான் படிக்கும் போது ஓரு கடிதம்.நண்பர் அன்பர் தான்.நட்புக்கு தூது விட்டு இருந்தார்.என்னோடு முதல் bloglaயும் அவன் இருக்கிறான்.
இப்போது சம்பந்தம் இல்லாம என் தூங்கத்தைக் கெடுத்தான் 10மாதத்துக்கு முன்னாடி இரவு 3மணிக்கு முக்கா மணிநேரம் பிளேடு போட்டான்..தாங்கமுடியல சாமி.
இனம் புரியாத சோகம்,சந்தோசம்,வருத்தம் சில ஆள்களா பார்த்தா இருக்கு அது எப்படின்னு தெரியல பூர்வஜென்மா தொடர்பா இருக்குமோ?