Friday, May 18, 2007

சிவகாசி

காரிருளில் கதிரவன் கரைய
வானக் கரும்போர்வையில்
வெண்மதி உலாவற
என் நினைவுகள் உயிர்பெற
நடுசாமம்(12 மணி)
தூக்க கலக்கத்தில்
நொடி முள் தள்ளாட
கடிகார மணிமுள்
மெதுவாக கீழே சரிய
மனம் பின்செல
பேனா முன் ஓட

சிவகாசியின் தண்ணிர்க்கதை
வருடம் எப்போதும்
பெய்யும் மழை பொய்க்கும்
முக்காலம் வறண்ட வசந்த காலம்
தடம்புரண்ட தண்டவாள
ரயில் பெட்டிகள்போல்
காத்திருக்கும் வாய்
பிளந்தகுடங்கள்
முன்னிரவு ஊறிய உப்புநீரை
அடிப்பம்பில் முன்னேற்றி
பின்னிரவில் சேமிப்பர்

அயர்ந்த சூரியன்
கண் விழிக்கும் முன்
அதிகாலை எழுந்த
உக்கிரன் நாவு நீளும்
பெரிய குளம்,சின்ன குளம்
குட்டை, ஆறு திங்கும்.

மதியம் வெறிகொண்ட
பிளிறு போல்
திமிறித் தெறிக்கும்
உடலை ஊடுருவி
தேகக் குருதிநீர் பார்க்கும்.
உமிழ்நீர் கேட்கும் !

பசி அடங்கா சூரியன்
விண் கொண்டு
அழுதால் உண்டு மழை

விண்ணீர் கானல்நீர்
மண்ணீர் கண்ணாமூச்சி காட்டும்.
எனினும் நாங்கள்
கண்ணீர் காணோம்..

சிவகாசி பூமிக்கும் கோரப்பசி
புல் பூண்டு தாவரம்
தின்று வளரும்
கந்தக பூமி.

வெண்மதியின் ஓளி
அடிப்பம்பின் ஓலி என்
ஆழ்மனதில் வலி
இன்றும் எங்கோ !

தொடரும்...
"வெயில்" படம் ரொம்ப பிடிச்சு இருந்ததுனா கண்டிப்பா
ராமகிருஷ்ணன் "நெடுங்குருதி " நாவல் படிச்சுப் பாருங்க.
ஹிமாலயக்குளிரிலும் வெயில் உக்கிரத்தை அனுபவிப்பீர்கள். !

Tuesday, May 08, 2007

காது கொடுத்துக் கேளுங்க--வயிறு !


8-30
அய்யோ கட்டைல போறவனே , காலங்காத்தால நான் சரியா முழிக்க கூட இல்லை, என் மேல சுடுதண்ணிய (bed coffee) ஊத்துற,
நீயெல்லாம் மனுசப் பயலாடா,அறிவில்லை பரதேசி. உன்னைய சுடுதண்ணி ஊத்தி எழுப்பி விடனும்டா அப்பத்தான் புரியும் என் கஷ்டம்.

நாசமாப் போற நன்னாரி நாயே !
பல்லை விளக்கு.. அப்புறம் காலைக் கடன முடிச்சுத் தொலை.
நாத்தம் குடலைப் புரட்டுது.


கிறுக்குப் பய நேத்து தூங்கவிட்டியா? ராத்திரி 11மணிக்கு உனக்கு பீசா கேட்குது சனியன்,
அது வேற எதில செஞ்சாங்கன்னு பார்த்து நான் ஜீரணிக்குறத்துகுள்ள நடுசாமம் ஆகிடுச்சு.
சரியா ஓய்வு எடுக்க முடியல.

10-30
எப்பாடா ! ஓரு வழியா புள்ளையான்டன் குளிச்சு முடிச்சுட்டன் . எனக்கும் கொஞ்சம் உடம்பு சூடு குறைஞ்ச மாதிரி இருக்கு.பசிக்கிறதே , ஏதாவது இட்லி கெட்டிச் சட்னி சாப்பிடுட்டா பேஸா இருக்கும்.
ஆத்தா இன்னும் ஓரு டீய கொட்டுறானே :-(

11-30
அய்யோ முடியலடா.. எப்பா ஓரு வழியா சாப்பிட ஆரம்பிச்சிட்டான். என்னடா இது யார் குடலைத் திங்கிற? நூல் நூலா இருக்கு சரி சரி நூடுல்ஸா .பரவாயில்லை தின்னு தொலைறேன்.

12-30
ம்..என்னது ஓரே இடத்தில உட்காந்து இருக்கான். ஆஹா..கையக் கால தூக்கி சத்தம் போடுறானே... ஆரம்பிச்சுட்டன் கிரிக்கெட் பார்க்க. நம்மள இனிமே கொஞ்சம் கூட நிம்மதியா இருக்க விடமாட்டன்.
கடலை,சிப்ஸ்,நொறுக்கு தீனிய கொறிக்கிறான்..டேய் கிரிக்கெட்ல அப்ப
அப்ப இடைவேளை விடற மாதிரி சாப்பட்டுக்கு கொஞ்சம் gap விடு.
சண்டாளா ! உனக்கு வாயும் பல்லும் எதுக்குடா கொடுத்தங்க? மரியாதையா கடிச்சாவாது தின்னு .சாவுகிராக்கி
எனக்கும் மட்டும் கை இருந்தா உன் பல்லை உடைச்சி உன் கைல கொடுத்து இருப்பேன்..

8-30
டேய் இன்னும் பழய மேட்டர் சாப்பிட்டது அப்படியே இருக்கு.
என் வயித்தல வேற இடம் இல்லை.இந்த குடல் வேற இடிச்சுக்கிட்டு இருக்கான். !

இப்ப வேற, ஏதோ பிரியாணி சாப்பிடுறானே.
அயகோ.. திரும்பவும் ஆரம்பிச்சிடானே..இதுக்கு மேல முடியல, படுத்திறியேடா,
என் தலைவன்ட சொல்லி உன்ன பழிக்கு பழி வாங்குறேன்.

தலைவா(மூளை ) என்னால முடியாது. இவன் கண்டது கழுதைத் தின்னு
என்னைய குப்பைகாடா ஆக்கிட்டான்.கீளின் பண்ணு.

தயவு செய்து அவன் கொடுத்ததை அவனுக்கே அனுப்பிரு.
இந்தா வாங்கிக்கோ..:-) உவ்வாக் (வாந்தி).. :-( .

சந்தோசமா காலைல இருந்து என்னை பாடாப் படுத்தினில உனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்..

என்னது எதோ சத்தம் கேட்குது "வயிறு சரியில்லை..பாஸ் "
அடப் படுபாவி. பன்னாடை ! பன்னாடை ! செவிட்டுப் பயலே. காலைல இருந்து
பைத்தியமாக் கத்திகிட்டு இருக்கேன்..நானா சரியில்லை. தின்னது எல்லாம் நீதான் டா பிசாசு.


வாழ்க்கை பூரா அழுது அழது வேலை பார்க்கிற ஜீவன் நானாத்தான் இருப்பேன். :- ( :-(