Saturday, October 06, 2007

8 Lesser facts about me.!

Thanks hepzi for calling me to write abt myselves.I am continuing

1.எவ்வளவு சந்தோசமோ,துக்கமோ,வருத்தமோ,அழுகையோ,ஆட்டமா,பாட்டமோ
எல்லாம் ஓருமணி நேரம் தான் அதுக்கப்பறம்
உணர்ச்சிகள் மாறி விடும்.நிறைய நேரம் இத feel பண்ணி இருக்கேன்.அதனால எதுக்கும் ரொம்ப அலட்டிக்கிடமாட்டேன்


2.2ம் வகுப்பில் ஊருக்கு வெளியே கூட்டிட்டுப் போனாங்க(10கிமீ) ஓரு தோட்டத்துக்குன்னு நினைக்கிறேன்.மதியச் சாப்பாடு இலைல கட்டி கொடுத்து இருந்தாங்க.அப்படியே நாம் சாப்பிட்ட இலைய வீட்டுக்கு கொண்டு வந்துட்டோம்ல..:-)


3..எல்லாமே பொருளுக்கும் இரண்டு விதமா சொல்றாங்க.ஆனா நான் மூணுன்னு நினைக்கிறேன்.
1ஆரம்பம் 2.இருத்தல் 3.இறத்தல்.
என் வாழ்க்கைத் தத்துவத்திலயும் மூணு உண்டு.
1.சரி,தப்பு,தப்பில்லை.மூணாவது சொல்லித்தான் பிழைத்துக் கொண்டு
இருக்கிறேன்.

4.நான் இருக்க இடத்தில ஓண்ணு ஆர்ப்பாட்டம் பண்ணிக்கிட்டு,
இல்லை ரொம்ப அமைதியா இருப்பேன்.
தண்ணி மாதிரி எனக்கு ஓண்ணும் பெரிய
தனித்துவம் கிடையாது..

5.5-6 தடவைதான் நான் வாழ்க்கைல நினைவு தெரிஞ்சு(15 வருசம்)
கோபமோ/அழுகை ரொம்ப பண்ணி இருப்பேன்.
அதற்காக எருமை மாட்டில மழை பெய்யறமாதிரி :-)
வாழ்க்கை வாழுற ஜீவன் இல்ல.
மாற்றமுடியாததுக்கு வருத்தப்படறதோ/புலம்புறதோ மாட்டேன்.
அதில் அர்த்தமும் இல்ல.ஓவ்வொரு விசயத்தையும் மேலோட்டாமா
ரசிச்சுப் பார்த்த வாழ்க்கைல கவலைங்கிறதே கிடையாது.


6.நான் படிச்ச முதல் ஆங்கில புத்தகம்
You Can win.பிடிச்ச புத்தகங்கள்
ஜெயங்காந்தன் கதைகள்
விவேகானந்தர் சிகாகோ சொற்பொழிவுகள்
ஓசோ "medidation to medication"
The Alchemist.

7.வித்தியாசமான எண் இது.நான் பிறந்தநாளும் கூட.நான் என்னதான் கணிப்பொறியில்
3வருசமா ஆனி புடுங்கினாலும் உயிரியலில் தான் என் ஆர்வம்.உயிரியல் வேலைக்கு எப்ப கிடைச்சாலும் மாறுவேன்.


8.நான் பிரமிச்ச நண்பிகளில்(மிகச்சில) பெண்களில் "ரிடாவும்" உண்டு.சுறுசுறுப்பு,சிரிப்பு,குறும்பு,நட்பு பாரட்டுதல்
இன்னும் நிறைய சொல்லலாம்.அப்புறம் நம்மள எழுத கூப்பிட்டவங்களைப் பத்தி இதக் கூட சொல்லலைனா நல்லா இருக்காது.:-)

மூளைக்கும்/இரைப்பைக்கும் இரைப்பதும் இரையாகமல் இருப்பதும்
வாழ்க்கை..(வைரமுத்து தண்ணீர் தேசம்.)
Rules to continue the meme:


Tag atleast 5 people to continue the meme
Leave a comment to the person who tagged u once u've completed.
Mention the person who tagged you.
Put down these rules below ur meme.
keep it going :)

1.Saravana
2.Guna
3.Alex
4.கொழுப்பு
5.Rita
(recursion)