Thursday, April 17, 2008

உலகம் காலம் நேரம் தட்பவெட்பம் !




பாஸ்டனில் குளிர்காலம்( winter டிசம்பர் - ஏப்ரல்) முடிச்சு வசந்தகாலம்(spring ஏப்ரல் - ஜூன் )
ஆரம்பிச்சதுன்னு பார்த்தா..

என்ன கொடுமைடா இது.திடீரென -2 -1 0 டீகிரி அடுத்த நாள் வெயில் அடிச்சு
+20 டீகிரி பாஸ்டன்ல..4 மாசாம -2 டீகிரி சராசரியா.

நான் கண்கூடப் பார்த்த சில தட்பவெட்ப அதிசயங்கள்..

காலையில்
1.சுள்ளுன்னு வெயில் அடிக்கும்..ஆனா -5 -6 டீகிரி இருக்கும்..

2.குளிர்காத்து காதை பதம் பார்க்கும்..குடுகுடுன்னு கார்ல உங்காந்தா
கார்ல சூரியகதிர் ஊடுருவி சுடும்...

3.இரவு 8மணி ஆனாலும் சும்மா ஜம்முன்னு சூரியன் பிரகாசமா இருக்கும்.

4.குளிர்காலத்தில பாஸ்டனில் 10நாளுக்கு ஓருதரம் கண்டிப்பா பனிச்சாரல் உண்டு.

5.நம்ம மனசு கடிகாரத்தப் 1-2 மணி நேரம் மாத்தி வேலை பார்த்தாலும்
ஓரு மண்ணும் கால வித்தியாசம் தெரியாது..


6.இன்னும் ஐரோப்பவில் 12மணிக்கு சூரியன் இருக்குமாம் :-(
உலகத்தில ஓவ்வோரு இடமும் எப்படி தட்பவெப்ப நிலை இருக்கும்னு
கூகுள் கடவுள்ட கேட்டு ஓரு அருமையான மேப் கிடைச்சது..


தட்பவெப்பநிலை ..
http://upload.wikimedia.org/wikipedia/commons/3/32/World_Koppen_Map.png
11 வகையாப் பிரிச்சிருக்கார் koppen..
படத்த பார்த்தாலே புரியும் நிணைக்கிறேன்..


சிவப்பு --- பாலை மக்கள் பாலைவனம்


நீலம் --கடலும் கடல் சார்ந்த இடம் நெய்தல்


பச்சை -- குறிஞ்சி ...


ஊதா --பனியும் பனி சார்ந்த இடம்..


அதே போல நேரம் பார்க்கிறதக்கும் வலைதளம்


http://www.worldtimezone.com/

எந்த நாட்டில என்ன மணி என்பதை அருமையா கோடு எழுதி வைச்சு இருக்க புண்ணியவானுக்கு இந்த எளியவனின் கோடி நன்றிகள்...


அதே போல் பூமி பந்து இரவு,பகல் எப்படி இருக்கு..அதாவாது எந்த பக்கம் சூரிய்ன் இருக்கு என்பதை அருமையாக ஓரு வலைத்தளம் பதிவு பண்ணி உள்ளது..




சந்திரன்,சூரியனில் இருந்து பார்த்தா எப்படி இருக்கும்னு கூட

பிரோகிரம் நல்லா எழுதி வச்சு இருக்காங்க..

கொஞ்சம் sun.. moon கிளிக் பண்ணி அப்டேட் கொடுத்துப் பாருங்க..