முற்றுப் பெறா எண்ணச் சுழற்சியில்
திசையில்லா பயணத்தில் சுற்றம்
தேடி குழப்பத்தை மட்டும் சுமந்து
நினைவுகள் தேங்கி சுமையாய்
விளக்கங்கள் விளங்காமல்
விடை கிடைக்கா வினாக்களுடன்
காலச் சக்கரத்தில் சுழலமுடியாமல்
குடைராட்டினத்தில் உயர இறங்க சுற்றியவனாய்
உறைந்த சுழலில்
இதயத்துக்கும் மூளைக்கும் இடையில்
தத்தளித்து தொலைந்தது மனது.
இனிய நிலவுக்கு என்னை
இரையாய் வைத்து
இரவுகள் சுகமாய் தூங்குகின்றன
கண்ணில் தெரிந்த வானம்
கானலாய் போகி சிறகு இழந்த
பறவையாய் பூமியை
நோக்கி விழுகிறேன்