Sunday, October 05, 2008
பெங்களூர் மராத்தான் November 16
பெங்களூர் மராத்தான்....Nov 16th
ரொம்ப ஆசைப்படல இந்த வருசம் 26கிலோமீட்டர் ஓடி முடிக்கனும்.
எனக்கு கொஞ்சம் கொழுப்பு,திமிர்,பிடிவாதம்,வெறி,எகத்தாளம் அதிகம்.
வாழ்க்கை மராத்தான் ஓட்டம் மாதிரி இருக்கு
1997 சென்னைல ஆரம்பிச்சு பெங்களூர்,கோயம்புத்தூர்,
மதுரை,திரும்பி பெங்களூர்,பாஸ்டன்.நல்லா ஓடிக்கிட்டே
இருக்கேன்.தரணி ஆளுவான் பரணில பெறந்தவன்..:-)
2000 நவம்பர் மாசம் நல்ல நாள்..சென்னைக்கு பக்கதில் உள்ள வேம்பம்பட்டு !
அடுத்த நாள் காலேஜ் மராத்தான் பந்தயம்.முந்தைய நாள் 7மணிக்கு.
நான் சும்மா சொன்னேன் நானும் மராத்தான் ஓடப்போறேன்
எனக்கு எதிரியே என் வாய்தான்,(கணக்கு வழக்கு இல்லாமா அடி வாங்கியிருக்கேன்.)
தம்பி மராத்தான் 12கிமீ(திருவள்ளுர் -- வேப்பம்பட்டு)..நாளைக்கு பந்தயம் ஓடிருவியா?
சுபாஷ் ( நீர் இப்ப எங்கயா குப்பை கொட்டிக்கிட்டு இருக்கீறீர்? ) ,இறைமொழி,
கிண்டல் பண்ண ஆரம்பிச்சாங்க..பக்கத்தில குண்டு வினோத் :-)
நீ மட்டும் ரேஸ்ல நிக்காம ஓடு $12 பந்தயம்..சரியா?
நிக்க மட்டும் கூடாது...ஓகே..சரிடா..
9-30மணிக்கு நானும் வினோத்தும் மெஸ்ல சாப்பிட்டு வந்தேன்..
ஸ்ரீபெரும்புதூர் ஆவடி சாலைல பேசிக்கிட்டே வந்தேன்
இருட்டில கொஞ்சம் ஓடிப் பார்த்தேன்,ஆமா ஓரு 300மீட்டர் :-)
Collge football teamla forward player..அது தவிர ஓட்டம்னா
எனக்குக் தெரியாது..
சரி நான் நிக்காம ஓடுறேன்னா இல்லையான்னு பார்க்கனுமே?
இவனுக இதுக்காக என் பின்னாடியே ஓடி வருவானுகளா?
அதனால ஜெயிச்சுறலாம்னு ஓரு தைரியம்.
4மணிக்கு பந்தயம்..3மணிக்கு பூனையா எந்திரிச்சு போய்ட்டேன்
..ரொம்ப சந்தோசமா இருந்தது..2பேரும் தூங்கிக்கிட்டு இருந்தானுங்க
4மணிக்கு நான் கொஞ்சம் வேகமாகவே ஓட ஆரம்பிச்சுட்டேன்.
ஏன்னா இவனுங்க என்ன பார்க்க முடியாதுல அதுக்காக..
பரதேசிப் பசங்க 5கிமீ முடிச்சவுடன் பின்னாடி சைக்கிள்
எடுத்திட்டு வந்துட்டாங்க..15கிமீ சைக்கிள்ளா மாறி மாறி
மிதிச்சு வந்துக்கிட்டு இருந்தானுங்க....பாருங்க
சனங்களே எவ்வளவு கஞ்ச அல்ப பசங்கன்னு.
அடங்கோயால ஓடுறேன்,ஓடுறேன் ஓடிக்கிட்டோ இருக்கேன்.
கண்ணுக்கு எட்டிய தூரம் எவனையும் காணும்.
பக்கத்தில போலீஸ் வேன் பாதுகாப்புக்கு
கொஞ்சம் பந்தவாத்தான் இருந்தது.
.எவ்வளவு தூரம் ஓடியிருக்கேன்னு கேட்டா 10கிமீ. சொன்னாங்க.
முடியல..பார்த்தா நானும் ஓரு ஆந்திராக்காரனும் மட்டும் தான்
ஓடுறோம்...அவனை முந்திட்டேன்.
பந்தயம் நிக்காமா ஓடனும்..ஓடிக்கிட்டே இருக்கேன்.எங்கயும் நிக்கலை
எங்க கல்லூரி கடன்காரங்கனுங்க டீரிங்க்ஸ் எதுவும் கொடுக்கலை..
13கிமீ பக்கத்திலதான் வீணா போனவங்க லெமன் + தண்ணீர் கொடுத்தானுங்க.
அசத்தல figurea நிப்பாட்டா வேண்டியது தானா..சொம்பை
பசங்க நின்னானுங்க.
அத கையில் வாங்கி நின்னேன். இறைமொழி,சுபாஷுக்கு ரொம்ப சந்தோசம்..!
".டேய் நின்னுட்ட பந்தயத்தில நாங்கதான் கிலிச்சோம்
500 கொடுத்திரு.." குத்துயிரும் கொலையிருமா நான்
ஓடிக்கிட்டு இருக்கேன்.அவனுகளுக்கு ஆனந்தம்.
12கிமீ சொன்னானுங்க..பார்த்தா 13ஆச்சு இன்னும் கல்லூரி
வந்த பாடு இல்ல..பார்த்தா மொத்தம் 16கிமீ ..கொன்னுட்டானுங்க.
என்னோடா பாதி உயிர் மூச்சு செவ்வாய்ப்பேட்டைல
ஓடிப் போச்சு.இரண்டு காலு,கை நட்டு கழண்டு போச்சு.
ஆஹா ! கடைசில நான் இரண்டாவது இடம் !
அய்யோ கை,காலும் பிஞ்சு போச்சு..முடியல.
சட்டி கிழிஞ்சு போய்ச்சுடுச்சு.
வலி கொன்னுடுச்சு..ஆமா ஓரு பயிற்சி இல்லாமா
ஓடினா..வலி தாங்க முடியல..எம்மா,எப்பா
அப்படின்னு புலம்பிக்கிட்டே வீடு சேர்ந்துட்டேன்..
3Bruffen அடிவைத்தில கரைச்சு போச்சு.
2001 அத விட தெனவட்டு ஜாஸ்தி.1மணிக்கு தூங்கி 4மணிக்கு
போய் 12கிமீ ஓடி 2வது வந்தேன்.(100% luck தான்)
Nov 15 இந்த வருசம் யாரவது challenge பண்ணுங்க..
Nov 16th Bangalore Ultra Marathaon..
பார்த்திராலாம்..ஓரு கை..!
Subscribe to:
Posts (Atom)