Friday, December 19, 2008

பூமித்தாயும் நிலாக்குழந்தையும் !


கற்பனை காமெடி என் கூட வளர்ந்தது அடங்காதது..!
பூமித்தாயும் நிலாக்குழந்தையும் ஒரு கற்பனை !! பொறுமையாப் படிங்க..

நிலா:ம்மா ம்மா..
பூமி:ஏன் லட்டு ஏண்டி அழறே?

அங்க பாரும்மா ! அந்த குண்டம்மா பிள்ளைட்ட என்னைப்
பார்த்து பூச்சாண்டி பூச்சாண்டின்னு சொல்லி சாப்பாடு குடுக்கிறா.
நான் என்ன கருப்பவா இருக்கேன்?
என் செல்லம் நீ சிவப்புடி..
இரு குண்டம்மாவ தள்ளி விடுறேன்..

எம்மா எம்மா ! நான் படிக்கணும் ஊரச் சுத்தணும்.

படிக்கணுமா? அடியே படிச்சவனப் பாரு.
என் அடிமடில அணுகுண்டத் தூக்கிப் போட்டுப் பார்க்கிறான்.
இந்தப் பக்கம் ஓண்ணு(USA) அந்தப் பக்கம் ஓண்ணு.(China)
எல்லா இடத்திலயும் படிக்காதவன் ஒழுங்கா பயிர் வளக்கிறான்..

ஏம்மா அந்தா சட்டை போடதவர் என்ன பண்றார்?
அவரும் படிச்சவர் தான.
அவாள் ஹோமம் பண்றாரளாம் என் சட்டை ஓட்டைய(oozone)
அடைக்கிறாளம்.அதுவும் A/C போட்ட ரூம்ல Undergroundல இருந்து..(Boston Lakshmi Temple) அபிஷ்டு உங்க வேலையைச் சேமமாப் பாருங்கோன்னா. என் சட்டைய நான் பார்த்திக்கிறேன்

அடியே ,பூமில இருக்கிறது, அவனுங்க போடறதில இருந்து
எல்லாத்தையும் தின்றுவேன் ! ஆனா இந்த பசங்க
என்ட இருந்து பாலித்தின்னு கண்டுபிடிச்சு என்னையே
பல வருசத்துக்கு confuse பண்றானுங்க.

அவன் வீட்ல டிவி பார்க்கிறதுக்கு நம்ம வாசல்ல லட்சம் மைல் தாண்டி Satellite வைப்பான்.

ஏதோ அற்ப ஆயுசுப்பசங்கன்னு விட்டு வைக்கிறேன்.

படிச்சால இந்த பிரச்சனை கண்ணு.விளாங்காமப் போயிடுவா.
அதனால சமத்தா சுத்திக்கிட்டு இருப்பியாம்.

அம்மா உனக்கு பகல்ல தாலட்டுப் பாடுவேனாம் தூங்குவியாம்..

எம்மா என்னை ஏன் பகல்ல அப்பா மறைச்சுடுறார்?

இந்த பூமில இருக்கவ கண்ணு எல்லாம் கொள்ளிக் கண்ணு
சும்மாவே முழுசா இருக்க உன்னை தேய்நிலா,வளர்நிலா
சொல்லுவானங்க.போதக்குறைக்கு பாட்டி வடை சூடுறல இருந்து
தமிழ் சினிமாப் பாட்டில உன்னை விட்டா எதுவும் கிடையாது..

இந்த வாலுப் பையன்(comets) என்னை எப்பப் பார்த்தாலும் sight அடிக்கிறான்.
உங்க அப்பாட்ட சொல்றேன் ,ஒழுங்கா வாலச் சுருட்டி பின்னாடி போவான்.

ஏம்மா ! நான் மட்டும் குண்டு சட்டில குதிரை ஓட்டுறேன்.
இருந்தாலும் இந்த பொடிப்பசங்க(human) பக்கத்து மாமா செவ்வாயா பார்க்காப் போறாங்க.

குண்டு சட்டில ஓட்டலடி ! உங்க அப்பாவோட சேர்ந்து நம்ம எல்லாரும்
புதுப் புது இடம் பார்த்துக்கிட்டு இருக்கோம்.!

atleast பக்கத்தில Andremedha Galaxy or சனிப் பையன் Titaana look விட்டு வர்றேன்.

அடி சண்டாளி ! நானே வழி தெரியாம இந்த மனுசனுக்கு வாக்கப் பட்டு
உன்னை பெத்துப் போட்டு சுத்திக்கிட்டு இருக்கேன்..
கொழுகொழுன்னு இருந்து ஓடி ஓடி மெலிஞ்சுட்டேன் !
லட்டு ! நீ இந்த அண்டத்தில போனினா பூந்தியாப் போய் சீரழிஞ்சு சின்னா பின்னமா சிதறிருவ இது பாதாள உலகம். உங்க நைனா(sun) கூட கண்டுபிடிக்க முடியாது.

எப்படியும் கொஞ்ச நாளில என்னையே தூக்கி கொஞ்சம் நகட்டி வைச்சுடுவானுங்க ! அப்புறம் உன்னையும் என் கண்ணுக்குப் பக்கத்தில வச்சுறுவானங்க.

ஏம்மா?
அதுவா இப்ப இரவுல இருட்டா இருக்கா அதனால கொஞ்சம் தள்ளிவச்சா எப்பப்
பார்த்தாலும் பகலா இருக்கும்ல ! Current தேவையில்லை..!

இங்க பாரு Recessionla benchla உங்காத்து இருக்கவன் லொள்ள,
இவரு சும்மா இல்லையாம்,பூமியோட சேர்ந்து 400மைல் வேகத்தில ஓடி ரவுண்டு அடிக்கிறராம்.அடி செருப்பால ! .நான் தாண்டா உனக்கு சோறு போட்டு உலகத்தைச் சுத்திக் காட்டுறேன்.

மக்களே சத்தியாம நான் பெஞ்சல இல்ல :)
Thanks cartoon :caglecartoons.com