மென்மையாய் மெதுவாய்
சாரலாய் ஓரு ஓரமாய்
சிறு தூறலாய்
தென்றலும் முகில்கூட்டமும்
முந்தி அடித்துச்
சிதறி தரை
இறங்கி வர ஆரம்பித்தன
அவளைக் காண !
மண்ணுக்குச் செல்ல இருந்த
மழைத் தூறல்களை அவள் விரல்களால்
விண்ணுக்கு அனுப்பி இருந்தாள்.
பூமியில் பட்டுச் சிதறிய
துளிகள் அவள்
புவியிர்ப்பு விசை மீறி அவள்
விரலிர்ப்பில் எம்பிக் குதித்தன.
கடற்கரைக்குச் செல்வோம் என்றவளை
அலைகள் உன்னைத்
தேடி ஓடி வரும்
சுனாமி செய்து விடும்
வேண்டாம் என்றேன்.
மோட்சம் பெற்ற சில தூறல்களை
என் மேல் வீசி ஏறிந்தாள்.
மழையை நனைத்தவள் !
Wednesday, July 01, 2009
Subscribe to:
Posts (Atom)