மார்ச் 17,18,19 . சென்னையில் டேரா (உபயம்: வேல் செல்வம்)
4 வருடம் சென்னைல (பக்கத்தில) நான் படிக்கும் போது சுற்றி இருந்தாலும் விடியற்காலைல மெரினாவுக்கு போனது இல்லை !
அதிகாலை 3-45க்கு சென்னை மெரினாவிக்கு போனேன். மவுண்ட் ரோடு சுத்தமா நிசப்தவும் ,காற்று நிம்மதியா தூசி இல்லாம பெருமூச்சி விட்டுக்கிட்டு இருந்தது..
மணல் மேட்டில் அப்படியே கடலை நோக்கி நடக்கிறேன்.வானத்தை பிசிஸ்ரீராம் கேமரா மாதிரி ஓரு 360கோணத்தில் பார்த்தேன்.அவ்வளவு சூப்பரா இருந்தது.
வானம் எங்கும் கும்மிருட்டு அமைதி .அப்படியே மணிரத்னம் படம் பார்க்கிற மாதிரி ஓரு effect.ஆங்காங்கே வெள்ளை வெள்ளையா மேகத் திட்டுக்கள்.
ஆதி மனிதன் எப்படி இருட்டில் இருந்து பயப்படமா இருந்தான்னு தெரியல.
ம்.கொஞ்சம் மனசுல கிலி தான்.இருந்தாலும் கில்லி மாதிரி அலை தனியா அலைமோதறத பார்க்கனும் நினைச்சேன்.
கடற்கரைய பார்த்தா அந்த அளவுக்கு அலை ஆரவாரமோ ஆர்ப்பரிப்போ இல்லாமல் இருந்தது.
நாலு பேரு நம்மல கண்டுக்கலனா நாமவாட்டுக்கு சீன் போடாமா வேலை பார்ப்போம்ல அது மாதிரி அடக்கமா அலை இருந்தது.சாயங்காலம் தான் நம்மைல தொடுறதுக்காக அலை வேகமாக ஓடி வரும் போல.
அதிகாலை 5-15 அப்படியே கார்ல பெசண்ட் நகர் பீச்க்குப் போனேம். பகலில் கிடைக்காத அவ்வளவு தூய்மையான காற்று காருக்கு வர சந்தோசமா பாட்டு கேட்டுக்கிடே போறோம்.
போற வழியில சாந்தோம் சர்ச் கேட் பார்த்தா அப்படீயே evil dead சுடுகாட்டு கேட் மாதிரி இருந்தது.ஒரூ புகைப்படம் எடுக்காம விட்டேன்.:-(
கடறகரைல மணலை விட குப்பைக் கூழம் தான் அதிகம்.5-40க்கு சூரியன் உதிக்க ஆரம்பிச்சது. சூரியக்கதிர் கடல் நீரை துளைத்து ஓளிவெள்ளமாக காட்சியளித்த்து.எங்கு பார்த்தாலும் ஓளிக்கதிர்களாய் கடல்.. பிரகாசம்.உடம்பு சிலிர்த்து புல்லரிக்கிற மாதிரி ஓரூ உள்ளுனர்வு.கண்டிப்பாக காதல்ர்கள் ஜோடியாக பார்க்க வேண்டி காட்சி இது.
என் மனதில் புதைந்த, அற்புதமான நெஞ்சை வருடும் காட்சியில் இதுவும் ஓன்று.
அப்படியே அந்த பிரகாசம் என் கண்ணுக்குள் உறைந்து போய் இருக்கு.
ஜத்குரு சொல்றமாதிரி இது நீங்கள் பார்க்க வேண்டிய விசயம்
அந்த நேரத்தில(காலை 5-30) காலாற இரு யுவதிகள் ,என்ன பேசுறங்கன்னு பார்க்க அப்படியே ஓட்டுக் கேட்டேன்.
."நீங்க அன்னைக்கு பண்ண குழம்பு எப்படி பண்ணிங்க?" நல்லா இருந்தது எப்படி பண்ணனும்.." பெண்கள் திருந்த மாட்டார்களா? ..இல்லை ஆண்கள் விடுவதில்லையான்னு தெரியலை..
Thursday, March 29, 2007
Tuesday, March 13, 2007
பார்க்கலாம்..
இன்று
ஏதாவது எழுத வேண்டும்
என் உள்ளம் சொல்ல,
வார்த்தைகள் இல்லாமல் என் மனம் திகைக்க,
மௌனத்தினால் என் இதழ் காய,
நாலாபுறமும் சுற்றி என் நா குழற,
சிகையைக் கலைந்து என் சிந்தனையைச் செலுத்த,
வானத்தைப் பார்த்து விழிகள் அகல விரிய,
மண்னைப் பார்த்து விழும்
தாடையை என் கரங்கள் தாங்க
பக்கத்தில் போகும் மடந்தையில் என் கவனம் சிதற :-)
நாளை எழுதுகிறேன்..

Tuesday, March 06, 2007
கலைந்த காலைப் பொழுதுகள்
1ம் தேதி சில/பல ஆயிரம் ரூபாய்களை நம்ம வங்கி கணக்குல பார்க்கிறது அலாதியான சந்தோஷம் ! சும்மா அதுவும் smsல (சிறு செல்பேசி செய்தி..) சம்பளத்தப் பார்க்கிறது ரொம்ப சுகம்! மாதா மாதம்..வேலை பார்க்கிறேனோ இல்லையோ ,30/31 இரவு சம்பளம் வர்ரதை பார்க்காம இருந்தது இல்லை .எததனை பேர் இந்த அற்ப சந்தோசத்தை உணர்ந்து இருங்கீகன்னு தெரியல ! உணராதவங்க கண்டிப்பா உணர்ந்து பாருங்க..!
2ம் தேதி 100ரூபா இருக்கும் அது சோகமான விசயம்.:-(
மலறும் நினைவுகள் ! நினைச்சிப் பார்த்தாலே பூரிப்பா/சிரிப்பா இருக்கு !
மறக்காத கலைந்த காலைப் பொழுதுகள்..!
கி பி 2002 மார்ச் ..அழகிய சிவகாசி மாநகரம் செம்மண் காடு ! சனிக்கிழமை காலை 5-15மணி சூரியன் விழிப்பதற்க்கு முன்னர் ஒரு 3 VIP (வேலை இல்லா பட்டதாரி) வாலிபர்கள் திக்கு தெரியாம சைக்கிளில் சுத்திக்கிட்டு இருந்தோம் . ( இப்பவும் IT MNC la வெட்டியாதான் வேலை பார்க்கிறோம்.. ) பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள டீக்கடை!
தினந்தந்தி,தினமலர்ல ஏன் வெறும் 10 பக்கம் மட்டும் இருக்குதுன்னு வருந்தப்பட்ட காலம்..:-)
வெறும் உண்டியல் காசு 8.50ருபாயல எங்கள் டீக்கடைக் கனவு ஓரு செல்பேசி,கணிணி,வண்டி (கட்டாயம் இல்ல).
சாயங்காலம் 4-30மணி.
எதிரில் 1500ரூபா (மாச )சம்பள வேலைக்கு எங்கள் சிநேகிதன்(கனிணிப் பொறியாளன் 75%) சைக்கிளில் செல்கிறான்.. நான் என் பக்கத்தில இருக்கும் நண்பனிடம் கேட்கிறேன் "ம் ! நாமல்லாம் எப்படா வேலைக்குப் போறது? " அவன் "டேய் நாமலும் வேலைக்குப் போவோம்,சம்பாதிப்போம்.ஆனா அவன் ,நம்ம இப்ப இருக்க மாதிரி இனிமே ஜாலியா இருக்க முடியுமா? அவன் கொடுத்து வைத்தது அவ்வளவு தான் ..."
[அந்த 1500ரூபா சம்பள வேலைக்கு நான் முயற்சி பண்ணினது வேற விசயம் :-))
எங்க பக்கத்தில டீ குடிக்கிற பெரிசுகள சமாளிக்கிறது ரொம்ப கஷ்டம்
தம்பி என்ன படிச்சருகிங்க?
BE அப்படின்னா? எஞ்சியனியரிங்..
ஓ ! எத்தனை வருசம் படிச்சிங்க?
4 வருசம்
4 வருசம் படிச்சு வேலை கிடைக்கலையா? தம்பி முதலில் எந்த வேலை கிடைச்சாலும் அதில சேர்ந்திருங்க.கூச்சப்படாதிங்க..
""யோவ் ! 12 மாசத்துக்கு முன்னாடி appointment letter கொடுத்தான்,, வேலை சேர்ரதுக்கு 3மாசத்துக்கு முன்னாடி வர வேண்டான்னு சொல்லிட்டான் "" அப்படின்னு அவர்கிட்ட சொல்லக்கிட்டு இருக்க முடியாது..
மௌனம் ! வார்த்தைகளை விட மௌனத்துக்கு பல அர்த்தம்/பலம் இருக்கும் அது எல்லாருக்கும் புரியாது... புரிய வைக்கவும் முடியாது. எதிராளி கண்களை/முகத்த பார்த்து பேசினாத்தான் அது தெரியும் ! மௌனத்த பத்திப் படிக்கனும்ன "ஊருக்கு நல்லது சொல்வேன் " தமிழருவி மணியன் புத்தகத்தைப் வாசித்துப் பாருங்க." அருமையான புத்தகம்.
கி.பி 2007 மார்ச் 3 5 வருச வாழ்க்கைல எனக்கு 5எண் சம்பளம் கிடைச்சது தான் மிச்சம்.! இப்பவும் எனக்கு பல சனி/ஞாயிற்றுக்கிழமை காலைப் பொழுது தூக்கம் வர்றது இல்ல..வாழ்ககைல எப்பவும் நம்மல கண்ணுக்கு தெரியாம ஓரு சூனிய/தனிமை உண்ர்வு துரத்திக்கிட்டு வரதுன்னு நினைக்கிறேன்...! பார்ப்போம்..! அது ஆயிரம்/லட்சம்/கோடி ரூபா சம்பாதித்தாலும் விடாதுன்னு நினைக்கிறேன்

Subscribe to:
Posts (Atom)