இருள் அணைத்த பெங்களுரு..!
மழை சிந்தி வழிந்த நாள்
உறக்கம் தொலைத்த நான்
ஓரு கோப்பை தேநீர் தேடி
இருளில் பயணித்தேன்.
யாருமற்ற சாலையில்
தேங்கிய நீரில்
விழுந்து கிடந்தது
உயிர் பெற்று
கண்சிமிட்டிய
தெருவிளக்குகள் !
தெருவிளக்கின்
வெளிச்சத்தை கிழித்து
தலை தெரிக்க வீடு தேடி
ஓடும் நாற்சக்கர வாகனங்கள் !
ஓருவரும் இல்லாமல் திகைத்து
வானம் இழுத்து போர்த்தி
நட்சத்திர காவலுக்கு
பால்வீதீயில் நிலாவை
வைத்தது.
நிம்மதியாய் பெருமூச்சு
விட்டபடி காற்று அங்குமிங்கும்
சுதந்திரமாய் சுழன்றது.
வெறுமையாய் என் கண்கள்
தேநீர் வண்டி தேடி மேய்ந்தது.
தாயின் சுமையில்
சில வருடங்களே
தனித்த சிறுவன்
கண்ணில் தூக்கம் சுமந்து
தேநீர்கூடை தூக்கி வந்தான்
இரவு நமக்கு பொழுதுபோக்கு
அவனுக்கு அதுதான் பொழுது.
என் வயிற்றின் குளுமையை
சுடுநீரின் வெதுமை அணைத்தது.
நரம்புகள் உயிர்பெற மூளை
நீயூரான்கள் விழித்தன
Friday, September 14, 2007
Wednesday, September 05, 2007
ராமு என்ற clone
2100 வருடம். உங்களுக்கு இந்த நூற்றாண்டு பற்றி தெரிய வாய்ப்பு இல்லை.ஸ்டேம் செல் முன்னேற்றத்தால் ஓரு வாரத்தில் 10கோடி ரூபாயில் நாம் விரும்பும் முழுவளர்ச்சி பெற்ற மனிதனை உருவாக்க முடியும். மேலும் digital செய்திகளை(DVD(10gb),DxD(100gb)) அப்படியே மூளையில் பதிவு செய்து ஞாபக சக்தியுடன் கூடிய புதிய மனிதனைத்(ரோபோ இல்லை, clone) தரமுடியும்.அவனை 100நாட்கள் ஓரு முறை பரிசோதித்து, சரிசெய்து அனுப்ப 1கோடி மட்டும்செலவு ஆகும். இப்பொழுது 2100 வருடம் செல்வோம்.
மருத்துவமனையில் இருந்து ஓரு ஓலக்குரல் !
மற்ற வியாதியஸ்ர்களைத் திடுக்கிட வைத்தது.
"என் பையன் ராமுவுக்கு என்ன ஆச்சு." கேட்டு மயக்கமடைந்தாள் கயல்விழி.
20நிமிசத்துக்கு முன்னர் போயிங் விமானம் திக்கு தெரியாமல் மலைமீது மோதி அதில் பயணித்த ராமு இறந்தது அவளுக்கு தெரியவாய்ப்பு இல்லை.
"கயல்விழி, கவலைப்படாத , ராமுவுக்கு வெறும் காயம் தான் உயிரோடுதான் இருக்கான்" சமதானப்படுத்தினார் ராமுவின் அப்பா ராஜா.
ராஜா அவசரமாக ராமு பிறந்தது முதல் 17வயது ஆகும்வரை பயன்படுத்தியது,படங்கள் நிழற்படம்,பேச்சுக்குரல்,எல்லாவற்றையும் DxD(100gb)ல் பதிவு செய்தார்.அதை அப்படியே www.tamilnaduclone.comக்கு அனுப்பி வைத்தார்.
தமிழ்நாடு மரபணு ஆராய்ச்சி மையத் தலைவர் அரவிந்தனை நேரில் சந்தித்தார். ஓரு வாரத்தில் என் பையன் மாதிரி ஒரு clone வேணும். 10 கோடி பணம் அரசாங்கத்திடம் இருந்து வாங்கிய clone உரிமைப்பத்திரம்,என் மகனின் சகலசெய்திகளையும் DxDல் உங்களுக்கு அனுப்பிவிட்டேன்.DNA வங்கியில் இருந்துஎன் மனைவி மற்றும்,என் DNA code எடுக்க அனுமதி அளித்து இருக்கேன் என்றார். 10 நாளில் ராமுவைப் போலவே உருவாக்கப் பட்ட புதிய clone வந்தான். மருத்தவமனையில் இருந்த கயல்விழி ஓடோடி வந்து மகனை கட்டிப்பிடித்து கண்ணீர் மல்கினாள்.
"வந்துட்டியாட.flight வெடிச்சதுப் பார்த்து எனக்கு உயிரே போச்சு. இப்ப உன்ன பார்த்ததுக்கு அப்புறம் தான் நிம்மதியா இருக்கு." "சின்னக் காயம் தான்மா.உயிர் பிழைச்சுட்டேன்." clone கூறியது.நீங்க கவலைப்படதீங்க.
நாட்கள் கடந்தன. கயல்விழி சகஜ நிலைமைக்கு திரும்பினாள்.
clone தனது உண்மையான ராமு இல்லை என்பதை நண்பர்கள் மூலம் உணர்ந்தாள்.அழுதாள் கயல்விழி , "இப்ப என்னால இந்த cloneஐ நம்ம பையனா ஏத்துக்க முடியாதுங்க!
100நாட்களுக்கு ஓரு முறை அவனுக்கு 1கோடி செலவு செய்ய வேணுமாங்க? " அவனை கருணைக்கொலை செய்யலாமா? நமக்கு உரிமை இருக்கா?
அப்பொழுது வந்த clone இதைக் கேட்டு வெட்கித்தலைகுனிந்தான். தான் ஓரு இயந்திரம் போல் நினைவுகளை உள் அடங்கியவன் எனவும், தனக்கு என்று ஓர் அடையாளம் கிடையாது என உணர்ந்தான். அவர்களுக்கு சங்கடம் கொடுக்காமல் தற்கொலை செய்ய அவன் முடிவு செய்தான். ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ ----------------------------------------------------------------------------------------------------------
முடிவினை நிரப்புங்கள் பார்க்கலாம்

Subscribe to:
Posts (Atom)