Thursday, August 22, 2024
2050 அல்வா மனிதன்
2050 அல்வா மனிதன்.. (குறும்படக் கதை)
இப்பொழுது மின்னணு சாதனங்கள் Wi-Fi இணையம் மூலம் இணைக்கப் பட்டுள்ளது.
உதாரணமாக மதுரையில் பிட்சா எங்கு கிடைக்கும் என்று கூகுளிடம் பேசிக் கேட்டால் அத
ஒரு 10 கடைய நமக்கு கொடுக்கும்.
அது போல் 2050ல் Mi.Fi மனித மனங்கள் இணைக்கப்படும்.
ஓரு கேள்வி,உதவி உங்கள் மனதில் தோன்றினால் அது உலகத்தில் உள்ள எல்லா கண்னி,மனம் மற்றும் எல்லா சாதனங்களில் தேடி ,
பதில்கள் வந்து உங்கள் மனதில் பதிவு ஆகி விடும்.
இதற்கு ஒரு தலை ரிப்பன் மட்டும் மாட்டினால் போதுமானது..அந்த ரிப்பன் Mi-Fi தலைமை சாதனத்துடன்
இணைக்கப் பட்டு இருக்கும்.
உதாரணம் -
செய்தித்தாள் நீங்கள் படிக்கத் தேவையில்லை, அது நீங்கள் தினமும் இரவு Mi-Fi ரிப்பன் மாட்டி இருந்தால் போதும்..
உங்கள் மூளையில் ஏற்றி விடுவார்கள்.
மொழி படிக்க வேண்டும் என்றால்
அதுக்கு காசு கட்டினால் படிப்படியாக மனதில் ஏற்றி விடுவார்கள்!
கதைக் களம்.
கவுண்டமணி- தலைமைப் பொறியாளர் ..20 கணினி திரையில் Mi-Fi வேலை செய்வதை கவனிக்கும் வேலை..
செந்தில் - பொறியாளர்.
ஜீனோ - யந்திரம் (robo) - எல்லா கணினியையும் இயக்கும்,
மனிதனைப் போல 100 மடங்கு சிந்தனை செயல் திறன் கொண்டது..
கவுண்டமணி : என்ன உலகம்டா இது.வர வர engineerக்கு ஒரு வேலையும் இல்ல..
எல்லாம் இந்த ரோபோவே பாத்துருது..
விட்டா ஒரு நாள் மனுசங்கள எல்லாம் தன் கட்டுப்பாட்டில எடுத்து ,
எல்லாத்தையும் மதம் பிடிச்சா மாதிரி திரிய விட்டுரும்....
ஜூனோ- ஒரு கணம்,இதைக் கேட்டு சிந்தனை செய்து திரும்பிக் கொண்டது..
செந்திலப் பார்த்து.. டேய் ஆண்டாராய்ட் மண்டையா,என்னடா பண்ற..!
செந்தில்: (அமைதியாக,மடிக்கணினியில் சொப்பன சுந்தரி இப்ப யாரிடம் இருக்கிறார் என்று தேடுகிறார்..)
கவுண்டமணி: டேய், என்ன இது?
செந்தில்: MI-FI கணினி
கவுண்டமணி: இதில நீ என்ன தேடுற?
செந்தில்: அண்ணே சும்மா..
கவுண்டமணி: டேய் திருந்துடா..இன்னும் எத்தன நாளைக்குத் தான் கிசுகிசு,கிளுகிளுப்பு பத்தி படிப்ப
ஆள் வளர மாதிரி மூளையும் வளரனும்டா..!
செந்தில்: இல்லேனே ஒரு பொது அறிவு..
ஜீனோ: நான் சொல்லட்டா சொப்பன சுந்தரி பத்தி..
கவுண்டமணி: டேய் ஜீனோ,இது உனக்கு சம்பந்தம் இல்லாத வேலை..
( ஜீனோ அமைதியாகிறது )
போய் ஒரு tea வாங்கிட்டு வாடா..
ஜீனோ: இதல்லாம் சரியில்லை ! என் வேலை அட்டவனையில் இதல்லாம் இல்லை.
கவுண்டமணி: நாங்க சொன்ன கேட்கிற மக்கு யந்திரம் தாண்டா நீ..போடா .
ஜீனோ: அது ஏன் உங்கள விட நாங்க 100 மடங்கு மூளை வச்சு இருக்கோம்.எல்லா வேலையும் நாங்கதான் பார்க்கிறோம்..
எங்கள சரி சமமா நடுத்துங்க.
கவுண்டமணி : டேய், .சமத்துவம் பேசாத.! விட்ட ஓட்டு போட உரிமை கேட்ப போல
50வருசமா ராப்பகலா கண்முழிச்சு வேலை பார்த்து உன்ன மாதிரி ஓரு அடிமைய கண்டு பிடிச்சு இருக்கோம் !
ஜீனோ: வெறுப்பு ஏத்தாதீங்க !! !.உங்கள மாதிரி முட்டாள் இல்லை நாங்க..மனித இனத்த நான் 5 நிமிசத்தில எனக்கு அடிமை ஆக்கிடுவேன்..
ஜீனோ: கடும் கோபமாகி.என்ன என்ன சொம்மைன்னு நினைச்சுட்டீங்களா?
கவுண்டமணி: டேய் ரொம்ப பேசதாட,மனுசங்க தான் 10 வருசமா இறங்கிறேன்,குதிக்கிறேக்கிறேன் பேசுறானுங்க
ஆனா உருப்படியா எதையும் செய்ய மாட்டேங்கிறானுங்க.
.நீ ரோபோ ..பேசாத ..செயல இறங்கு.
ஜீனோ: மனுசங்க மனசில ஒரே ஒரு வார்த்தைய மாத்த அனுமதி கொடுங்க,எல்லாத்தையும்
என் கால்ல விழ வைக்கிறேன்..
தொடரும்..பிடித்தால் பகிரு...ங்கள்,அல்லது விமர்சனம் தாருங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment