இந்தா வந்துட்டேன்யா வந்துட்டேன் ...என் கிறுக்கலை ஆரம்புச்சிட்டேன்..
முதலில எதுக்கு எழுதனும்னு யோசித்தேன்..சரி
"There is no errors and mistakes in life only experiences " Thx Alchemist.. படிச்சேன்.
அப்புறம். உன் காசா ! என் காசா போகுது..
ம்.ஒரு பெரிய கணிணி வல்லுநர் நேர விரயம் தான்.. இருந்தாலும் சில/பல நண்பர்கள் வேண்டுகோள்க்கு இணங்கி எழுத ஆரம்பிச்சுட்டேன்..!
சோழர்கள நம்ம குறை சொல்ற மாதிரி என்னை வருங்கால சந்ததியர் சொல்லக் கூடாது..
அதனால என் சுயசரிதை,வாழ்க்கை சம்பவங்கள் பத்தி இங்க எழுதுகிறேன்..
சரி எனக்கு ரொம்ப பிடிச்தது "வாழ்க்கை","காதல், "புத்தகம்" சந்தோசம்.
முதலில் வாழ்க்கையைப் பத்தி எழுதாலாம்னு நினைச்சேன்..
"வேதாந்தம் சிந்தாந்தம் பேசாதாடா பேசிப்புட்டா வாழும் காலம் பத்ததாடா.."
அப்படின்னு நம்ம "கவிப்பேரரசு" பாட்ட கேட்டு மாறிட்டேன்..!
நியாயம் தான் 10,000 வருசம் முன்னாடி உருவான பூமி பத்தி நம்ம 50 வருசத்திலஆராய்ச்சி பண்றது முட்டாள்தனம்..!
அடுத்து காதல்.
25வயது பையனுக்கு/பெண்ணுக்கு எப்படியும்
alteast 3 காதலாவது இருக்கும்..
system appdi.. ! windowsla bug இல்லைன்னு சொன்னா உலகம் நம்புமா..?
ஆனா காதல் எனக்கு அந்த அளவுக்கு அனுபவம் இல்லை..(:-))) )
ம்.ம் சரிங்க பாஸ் ! என் முதல்/கடைசி காதல் அனுபவத்தையும் எழுதுறேன்..!
நான் பார்த்த மனிதர்கள் பற்றி,தினம் என்னை பாதித்த விசயங்கள் பற்றி,என் கனவுகள்,
கவிதைகள்,கதைகள் எழுதப் போகிறேன்..!
Monday, February 19, 2007
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
//சில/பல நண்பர்கள் வேண்டுகோள்க்கு இணங்கி எழுத ஆரம்பிச்சுட்டேன்..!//
பாத்தீங்களா மதுரைக்கு வந்த சோதனைய? அந்த சில பல நண்பர்கள் யாருடா சரவணா? ஒண்ணு அப்படி சிலபேரு இருக்காங்களான்னு தெரிஞ்சிக்கணும். ஒருவேளை அப்படி இருந்தா அவங்களை வீடு தேடி போய் அடிக்கணும்.
ஓரு விளம்பரம் தாண்டா,முதல் கிறுக்கல் அப்படித்தான் கொஞ்சம் மிகைப்படித்தான் எழுதனும்.
பெல்ஜியத்தில இருக்க தைரியத்தில பேசாத..! வந்து உதைப்பேன்..!
Post a Comment