Thursday, March 29, 2007

அதிகாலைக் கடற்கரை

மார்ச் 17,18,19 . சென்னையில் டேரா (உபயம்: வேல் செல்வம்)
4 வருடம் சென்னைல (பக்கத்தில) நான் படிக்கும் போது சுற்றி இருந்தாலும் விடியற்காலைல மெரினாவுக்கு போனது இல்லை !
அதிகாலை 3-45க்கு சென்னை மெரினாவிக்கு போனேன். மவுண்ட் ரோடு சுத்தமா நிசப்தவும் ,காற்று நிம்மதியா தூசி இல்லாம பெருமூச்சி விட்டுக்கிட்டு இருந்தது..

மணல் மேட்டில் அப்படியே கடலை நோக்கி நடக்கிறேன்.வானத்தை பிசிஸ்ரீராம் கேமரா மாதிரி ஓரு 360கோணத்தில் பார்த்தேன்.அவ்வளவு சூப்பரா இருந்தது.

வானம் எங்கும் கும்மிருட்டு அமைதி .அப்படியே மணிரத்னம் படம் பார்க்கிற மாதிரி ஓரு effect.ஆங்காங்கே வெள்ளை வெள்ளையா மேகத் திட்டுக்கள்.
ஆதி மனிதன் எப்படி இருட்டில் இருந்து பயப்படமா இருந்தான்னு தெரியல.
ம்.கொஞ்சம் மனசுல கிலி தான்.இருந்தாலும் கில்லி மாதிரி அலை தனியா அலைமோதறத பார்க்கனும் நினைச்சேன்.

கடற்கரைய பார்த்தா அந்த அளவுக்கு அலை ஆரவாரமோ ஆர்ப்பரிப்போ இல்லாமல் இருந்தது.
நாலு பேரு நம்மல கண்டுக்கலனா நாமவாட்டுக்கு சீன் போடாமா வேலை பார்ப்போம்ல அது மாதிரி அடக்கமா அலை இருந்தது.சாயங்காலம் தான் நம்மைல தொடுறதுக்காக அலை வேகமாக ஓடி வரும் போல.

அதிகாலை 5-15 அப்படியே கார்ல பெசண்ட் நகர் பீச்க்குப் போனேம். பகலில் கிடைக்காத அவ்வளவு தூய்மையான காற்று காருக்கு வர சந்தோசமா பாட்டு கேட்டுக்கிடே போறோம்.
போற வழியில சாந்தோம் சர்ச் கேட் பார்த்தா அப்படீயே evil dead சுடுகாட்டு கேட் மாதிரி இருந்தது.ஒரூ புகைப்படம் எடுக்காம விட்டேன்.:-(

கடறகரைல மணலை விட குப்பைக் கூழம் தான் அதிகம்.5-40க்கு சூரியன் உதிக்க ஆரம்பிச்சது. சூரியக்கதிர் கடல் நீரை துளைத்து ஓளிவெள்ளமாக காட்சியளித்த்து.எங்கு பார்த்தாலும் ஓளிக்கதிர்களாய் கடல்.. பிரகாசம்.உடம்பு சிலிர்த்து புல்லரிக்கிற மாதிரி
ஓரூ உள்ளுனர்வு.கண்டிப்பாக காதல்ர்கள் ஜோடியாக பார்க்க வேண்டி காட்சி இது.

என் மனதில் புதைந்த, அற்புதமான நெஞ்சை வருடும் காட்சியில் இதுவும் ஓன்று.
அப்படியே அந்த பிரகாசம் என் கண்ணுக்குள் உறைந்து போய் இருக்கு.
ஜத்குரு சொல்றமாதிரி இது நீங்கள் பார்க்க வேண்டிய விசயம்

அந்த நேரத்தில(காலை 5-30) காலாற இரு யுவதிகள் ,என்ன பேசுறங்கன்னு பார்க்க அப்படியே ஓட்டுக் கேட்டேன்.

."நீங்க அன்னைக்கு பண்ண குழம்பு எப்படி பண்ணிங்க?" நல்லா இருந்தது எப்படி பண்ணனும்.." பெண்கள் திருந்த மாட்டார்களா? ..இல்லை ஆண்கள் விடுவதில்லையான்னு தெரியலை..









0 comments: