Friday, September 14, 2007

இருள் அணைத்த பெங்களுரு

இருள் அணைத்த பெங்களுரு..!

மழை சிந்தி வழிந்த நாள்
உறக்கம் தொலைத்த நான்
ஓரு கோப்பை தேநீர் தேடி
இருளில் பயணித்தேன்.

யாருமற்ற சாலையில்
தேங்கிய நீரில்
விழுந்து கிடந்தது
உயிர் பெற்று
கண்சிமிட்டிய
தெருவிளக்குகள் !

தெருவிளக்கின்
வெளிச்சத்தை கிழித்து
தலை தெரிக்க வீடு தேடி
ஓடும் நாற்சக்கர வாகனங்கள் !

ஓருவரும் இல்லாமல் திகைத்து
வானம் இழுத்து போர்த்தி
நட்சத்திர காவலுக்கு
பால்வீதீயில் நிலாவை
வைத்தது.

நிம்மதியாய் பெருமூச்சு
விட்டபடி காற்று அங்குமிங்கும்
சுதந்திரமாய் சுழன்றது.

வெறுமையாய் என் கண்கள்
தேநீர் வண்டி தேடி மேய்ந்தது.

தாயின் சுமையில்
சில வருடங்களே
தனித்த சிறுவன்
கண்ணில் தூக்கம் சுமந்து
தேநீர்கூடை தூக்கி வந்தான்

இரவு நமக்கு பொழுதுபோக்கு
அவனுக்கு அதுதான் பொழுது.

என் வயிற்றின் குளுமையை
சுடுநீரின் வெதுமை அணைத்தது.
நரம்புகள் உயிர்பெற மூளை
நீயூரான்கள் விழித்தன

3 comments:

'))')) said...

good i didn't kno u write poems so well!!..nice description...ana kadaisila neuron-la vandhu mudichuteenga ;)

'))')) said...

Thanks.
I want to write different poems.But i think always i come to my neurons.
future will avoid.
neuron-la vandhu mudichuteenga ;)
neurons are always facinating one for me..want to do research in future on that one .

'))')) said...

Hina, its so nice. I like it very much. U explained the nature very well and the words are so nice.
Keep it up