Thursday, June 21, 2007

அசக் புசுக் சரக்

பட்டப்படிப்பு வாங்கிட்டோம். ஆனா எங்களுக்கு
BTechna என்னனு தெரியாது ! ரசாயன பொறியியல்னா தெரியாது.

மூம்மூர்த்திகள் அசக்,புசுக்,சரக்
நட்பக்கு இலக்கணம் நாங்க தான்.
கல்லூரி போனா மூணு பேர் போவோம் இல்ல யாரும் போமாட்டோம்.
அசக் நல்லா தான் படிப்பான்,பிட் அடிப்பான் அரியர் வைப்பான்
புசுக் படிக்கமாட்டான் பிட் அடிக்க மாட்டான் பாசாகிடுவான்
சரக் படிப்பான், பிட் அடிக்க மாட்டான் கொஞ்சம் அரியர் வைச்சான்.

புசுக் தான் படைப்பாளி, அவன் வாய்க்கு தெரிச்சது சாப்பாடு,
கூப்பாடு. எங்களுக்கு பிக் FM அவன் தான். எப்பவும் ஓலிச்சுக்கிட்டே இருப்பான்.
அசக்கிடம் அந்த FM control இருந்தது."புசுக் நிப்பாட்டு"
அப்படின்ன அமைதியாடுவான். அப்பவே நாங்க
BPO பண்ணிக்கிட்டு இருந்தோம்.ஆமா எங்க கல்லூரி வேலை எல்லாத்தையும்
அவனிடம் outsource கொடுத்திட்டோம்.

அசக் அழிப்பவர்
8மணி கல்லூரிக்கு நாங்க 9-30க்கு சுறுசுறுப்பா கிளம்பினா கல்லூரில Attendence மூடிட்டாங்கன்னு
வீட்ல இருந்து படிப்போம்னு வழிகாட்டுவான். 6அடிக்கு 6 அடில 4நாள்
அசரமா உட்காந்து இருப்பான் சாப்பாடு,எல்லாம் அங்கேயே தான்..

திருடன் ஓரு நாள் ரூம்க்கு வந்து
எல்லா பொருளையும் திருடியிருந்தான்.யார்க்கு தெரியும் வைக்கிற
இடந்தால் தான எது காணாமப் போச்சுன்னு கண்டுபிடிக்க முடியும்.
காலைல hostelக்கு வெளியே 'அசக்' டிரங்க் பெட்டியும் திருடனும் கிடந்தாங்க.
டிரங்க பெட்டில இருந்த, 2வருசமா துவைக்காத உள்ளாடையும்,கைலியும் மோந்து பார்த்தா?
அதில கழுத பாருங்க எங்க certificates மார்க் சீட்ஸ் எல்லாமே அதிலதான் கிடந்தது.
தப்பிச்சது. அவ்வளவு பொறுப்பு.


சரக் ஓரு கோமாளி,

ஏப்ரல 1ம்தேதி 11மணிக்கு நைசா பிறந்தநாள் கேக் எடுத்து "அசக்" கிட்ட போய் பிறந்தநாள்ன்னு சொன்னான். ok அப்படி்யான்னு கேட்டு 12மணிக்கு கொண்டாடனும்னு hostel பசங்க 30பேர எழுப்பி விட்டோம்.யார்க்குடா பிறந்த நாள்ன்னு கேட்க, சரக் முத்துப்பல் தெரிய
"ஹி ஹி ! உங்களுக்குத் தான் ஏப்ரல் fools ன்னு சொன்னான்"
பிறகு என்ன 'சரக்' தர்ம அடி வாங்கினான்.

அப்புறம் தான் தெரிஞ்சது உண்மையிலே அவனுக்குப் பிறந்த நாள்னு.:-)
தான் பிறந்த நாளுக்கு மத்தவங்களுக்கு கேக் கொடுக்கனும் நினைச்சு வாங்கி இருந்திருக்கான்.
நல்லவன்தான் 'சரக்' என்ன துக்ளக்.

புசுக் ஓட்டக் காதான்
எதச் சொன்னாலும் எல்லாத்துக்கும் ஓலி பரப்பிருவான்.
BTech Chemical பட்டப்படிப்பு தொடங்கி 50நாள் கூட ஆகல.வகுப்பறையில்
டீச்சர் அசக் விடம் "நேத்து ஏன் labக்கு வரல" ..ஹி ஹி.. எங்க மாமா வந்தார்..
அடுத்து 'சரக்' அசக் மாமா வந்தார்.அடுத்தது 'புசுக்' அசக் மாமா வந்தார. :-)
டீச்சர் "அவர் மாமா என்ன உங்களுக்கா பொண்ணு கொடுக்கப் போறார்? "
வகுப்பறையில் சிரிப்பொலி அடங்க சிறிது நேரம் ஆயிச்சு,

அவ்வளவு நட்பு.

எப்படின்னு தெரியல.9 வருசம் ஆனாலும் மூம்மூர்த்திகள் பிரியாம இருங்காங்க.
(இதில நானும் ஓரு ஆள் :-) )
தூரம் காலம் சூழ்நிலை காதலர்களை பிரிக்கும் நண்பர்களை அல்ல.

7 comments:

'))')) said...

adutha post la intha moonu perula neenga yaru nu solluveenganu expect panaren...

den...oru kelvi neenga enda college la B.Tech padicheenga??? Romba nalla college ah irukum polla...

'))')) said...

konjam naal aagtum 3peruoda photo poduren.

SREC chennai romba nalla college than.

'))')) said...

நான் பதிவு போட்டா 7 கோமாளிகள்னு தான் போடணும். ஆனா 7 கோமாளிகளும் இன்னைக்கு ஒரு குறுந்தகவல் கூட பரிமாறிக்கிறது இல்லை.

"தூரம் காலம் சூழ்நிலை காதலர்களை பிரிக்கும் நண்பர்களை அல்ல" என்பது வைர வரிகள்.

ஆனா "நண்பர்களுக்கு" மட்டும்!!

'))')) said...

ITU ELLAM TOO MUCH EETHO ATTENDENCE ILLAMA VETTIYA COLLEGUKU POGA VENAMNU NINAICHU SONNEN.HUM NALLA MANASA YERUM PURINJIKKALA. MAMA NEE EPPO CUT ADICHA? APPURAM ENNAI PARTHU PADIPPANNU SOLLI IRUKIA EN MELA IRUKIRA NATPINAL THAN APPADI ORU GREEN POI NEE SOLLI IRUKKANU NINAIKIRAN

'))')) said...

Y WE R SYNCHING PERFECTLY COZ THERE IS NO EGO BETWEEN US, THE BINDING FORMULA GOES LIKE THIS, PUSAKU HAS EGO BUT WILL NOT SHOW TO ASAKU, ASAKU HAS EGO STILL WILL NOT SEE THT TO PUSAKU AND SARAKU, SARAKU HAS LITTLE EGO BUT WILL NOT SHOW TO ASAKU AND MOST OF THE TIMES TO PUSAKU. THT IS THE REASON I GUESS, WHEN I TURN BACK I CAN SEE THAT WE LIVED QUITE SATISFYING, MOST JOYOUS AND MEMORABLE LIFE TILL NOW ESP AT COLLEGE DAYS( C IS A SEA DIALOGUE I WILL NOT FOREGET FOR EVER)

'))')) said...

7கோமாளிகள் அ,ஆ,ர,வி,வி,தீ, இன்னோரு கோமாளி யாருடா?

//ITU ELLAM TOO MUCH EETHO ATTENDENCE ILLAMA VETTIYA COLLEGUKU POGA VENAMNU NINAICHU SONNEN.HUM NALLA MANASA YERUM PURINJIKKALA. MAMA NEE EPPO CUT ADICHA? APPURAM ENNAI PARTHU PADIPPANNU SOLLI //
நானும் ஓரு செமஸ்டர் condonation தாண்டா.ஓரு கோர்வையா சொல்லறத்துக்கு தான் நீ படிப்பேன்னு சொன்னேன்.

'))')) said...

தயவு செய்து சுயபுராணம் எழுத வேண்டாம் கொஞ்ஜம் திங்க் அவுட் ஆப் பாக்ஸ் வாழ்க்கையின் சுவராஸ்யங்களை தேடி பொரிக்கவும்

-அலெக்ஸ் (ஊர் நாட்டான்)