Thursday, December 06, 2007
பாலகிருஷ்ணன்,பாஸ்டன்,போயிங்.
எல்லாத்துக்கும் தெரியும் நான் பாஸ்டன் வந்துட்டேன்னு
தெரியாதவங்களுக்கு நான் ஒண்னும் பண்ணமுடியாது :-)
பாலகிருஷ்ணன்.இங்கே அமெரிக்காவில் அப்பா பெயர்தான் முதல் பெயர்! அப்படியே வைரமுத்து பாணில நான் வந்த flight பிரயாணயத்தை விள்க்குகிறேன்.
3நாள் முன்னர் விமானத்தில் பறப்பதை எண்ணி தூக்கவில்லை
கனவு பலிக்கும் போது தூக்கத்தைப் பற்றி கவலை இல்லை. 24-11-07
பெங்களுர் விமானத்தளம் என் அடுத்த வாழ்க்கை திருப்புமுனைக்கு தயாராக. பறக்கும் முன் ஆச்சரிய வெள்ளத்தில் மிதந்தேன்.
அது கண்ணுக்குள் அடங்கா ஆகாய அலுமினியப் பறவை
பெயர் போயிங் 747.
75 ஆயிரம் பொறியியல் படங்கள் வரையப்பட்டதாம்.
6 மாடி கட்டிட உயரம் 60அடி அகலம் கொண்டதுhttp://www.boeing.com/commercial/747family/pf/pf_facts.html)
பூமியை உருவாக்கியவன் எத்தனை படம் போட்டு இருப்பானோ?
என்னை ஏற்றிச்செல்ல தயாராக இருந்தது.
வழிநெடுக ஆங்கிலேயர்கள் வரவேற்க என் இருக்கையில் அமர்ந்தேன்.. ஜன்னலக்கு அடுத்தது.குடை ராட்டினத்தில் பயணித்தது
நினைவுக்கு வந்தது.
விமானத்தின் இருபுறமும் அதன் சிறகுகள் நீண்டு இருந்தன.
மொத்தம் 300பயணிகள் இருப்பர்.
சாதி,மதம் மொழி,இனம்,நாடு,வயது தாண்டி
எல்லோரும். 6மாத அகவையில் இருந்து 61வரை,
கறுப்பு சிகப்பு வெள்ளை என பற்பல !
அமைதியாக விமானம் புறப்பட எத்தளித்தேன்.
பெங்களூர் நகரவாசிகளின் சனிக்கிழமை காலை தூக்கம் கெடாமால் ஓலி எழுப்பியது.
விண்னைப் பிளந்து,காற்றைக் கிழித்து,சீறிப்பாய்ந்தது.
எளிதாக திரும்பியது 6மாடி 60அடி விமானம் நம் வாழ்க்கை திருப்பம் தான் கொடியது/அரிது.
என் கண்முன்னே ஓரு சிறு தொலைக்காட்சி பெட்டகம் அதை இயக்க கையில் பொத்தான்கள். ஆங்கிலம்,ஹிந்தி படங்கள் விளையாட்டு என பல அம்சம் அடங்கியது.
பறவையின் திசை,வேகம்,கண்முன்னே.
கண் அகண்டு விரிய திறந்த வாய் மூடாமால் சலனமின்றி நான். உணர்ச்சிகளும் சிந்தனைகளும் நிற்க உள்ளம் ஆனந்த உவகை கொண்டது !
அடி அடியாக உயர மேகத்தைத் தாண்டி 35000அடியில் நேராக செல்ல ஆரம்பித்தது.
35000 அடி உயரத்தில் பறவை ஊர்ந்து சென்றது.
தீடிரென ஒரு சத்தம்.பறவை கட்டுப்பாடு இன்றி ஓருபுறம் சாய ஆரம்பித்தது.
வீல் வீல் என்று சத்தம். கூக்குரல் ஆங்காங்கே. பயணிகளிடயே.
குடைராட்டிணத்தில் ஓரு குடையை மட்டும் வீசியது போல் உணர்வு.
வயிற்றில் இருந்து குடல் மட்டும் தனியே வந்தது எனக்கு.
"யாரும் பயப்படவேண்டாம்.மற்றும் தத்தம் இருக்கையின் கீழே உள்ள உயிர்காப்பன் உடையை(Life jacket) அணியச் சொன்னார்கள்"
அவரவர் கடவுள் துணைக்கு வந்தனர். எனக்கு நீச்சல் தெரியாது என்று பயம் :-)
அரபுநாட்டில் பறக்க எண்ணி அரபிக்கடலில் நனையப் போகிறேன்,
மெக்காவில் விழுந்தால் புண்ணியம்.என்றார்கள் :-)
பயத்தில் கண்மூடினார் ஒருவர்.
கண்மூடினால் மட்டும் காலன் தொடாலா போய் விடுவான் .
நல்ல வேளை என் பிள்ளையை விட்டு வந்தேன்..
" உப்புநீர் நீச்சல் தொடருமா ? அழுதது 2மாதக் கைக்குழந்தை.
அருகில் இருப்பவர் கொட்டாவி விட்டார். எதுவும் சொல்லாமல் தூங்க ஆரம்பித்தார்.
தூக்கம் எல்லாத் தொல்லையும் தொலைவில் வைக்கும்.
30000.. 25000..20000 15000 அடி என என் கண்முன் கணினி காட்டியது
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment