Thursday, January 24, 2008

வானம்


எத்தனை பேர் பகல் நேர வானத்தின் அற்புதத்தைப் பார்த்து இருப்பீர்கள்?


நான் பார்த்த பிரமித்த வானத்தில் சில..


நிலா,நட்சத்திரம் விழுங்கிய பகல் நேரம் தான் அதிகம் !!


சென்னைக் கடற்கரை அலையை முத்தமிடும் வானம்,


மருதமலை உச்சி தொட்ட முகில் வானம்


பெங்களுர் நந்திக் குன்றின் மெல்லிய வானம்


சிவகாசி கந்தக பூமியில் காய்ந்து


ஓடி ஒளிந்த வானம்


ஆகாய விமானத்தின் சன்னலில் எனக்கு


கைகாட்டிய பாற்கடல்,கறுப்பு,ஆரஞ்சு வர்ண வானம்

பாஸ்டன் பட்டிக்காட்டின் பனிபெய்யும் வானம்.


வான் எல்லைக் கோட்டைத் தேடி அலைந்தேன்.


வானுர்தியில்..காணக்கரிய காட்சி அது.


வாழ்க்கை போல் வான் முடிவற்றது எல்லையற்றது வரையறையற்றது.

ஏன் இந்த வானத்தின் மேல் எனக்கு இவ்வளவு ஈர்ப்பு


உயர உயரப் பறக்க துடிக்கும் என் மனமா?


முன்பிறவியில் பறவையாய் சிறகடித்து


வானத்தின் மடியில் தவழ்ந்து இருப்பேனோ?
பூகோள மைய ஈர்ப்பு விசையா?

0 comments: